மின்சார லாரி ஒன்றுக்கு ரூ.9.60 லட்சம் கிடைக்கும்
புதுடில்லி:பிரதமர் இ - டிரைவ் திட்டத்தின் கீழ், மின்சார லாரிகளை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுஉள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, நாட்டின் மின்சார வாகனங்களை ஊக்குவிக்க, கடந்த 2024 செப்டம்பர் 11ம் தேதி பிரதமர் இ - டிரைவ் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.இத்திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மொத்த வாகனங்களில் டீசல் லாரிகள் 3 சதவீதம் மட்டுமே உள்ளன. ஆனால், போக்குவரத்து உமிழ்வில் 42 சதவீதத்தை அவை கொண்டுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக 5,600 மின்சார லாரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே அரசின் நோக்கமாகும். மேலும், மின்சார லாரியின் மொத்த எடையைப் பொறுத்து அதிகபட்சமாக, 9.60 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். பி.எம்., இ - டிரைவ் இணையதளத்தின் வாயிலாக, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் இது வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊக்கத்தொகை வழங்க ரூ.10,900 கோடி அரசு நிதி ஒதுக்கீடு