உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பயோ எரிபொருள் திட்டங்களில் முந்தும் ஆந்திரா; பின்தங்கும் தமிழகம்

பயோ எரிபொருள் திட்டங்களில் முந்தும் ஆந்திரா; பின்தங்கும் தமிழகம்

சென்னை:ஆந்திராவில், ரிலையன்ஸ் நிறுவனம், 'பயோ காஸ்' திட்டத்தில், 65,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், பயோ எரிபொருள் வாரியம் இருந்தும், அந்த துறையில் முதலீட்டை ஈர்க்கும் திட்டங்களில், அரசு மெத்தனமாக செயல்படுவதாக புகார் கூறப்படுகிறது. வேளாண் கழிவு, வன எச்சம், திடக்கழிவு, பசுவின் சாணம் போன்றவற்றை பயன்படுத்தி, 'பயோ பியூல்' எனப்படும் உயிரி எரிபொருள் தயாரித்து, அதை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, எரிசக்தி, வேளாண், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, பயோ எரிபொருள் வாரியத்தை, தமிழக அரசு அமைத்து உள்ளது.இந்த வாரியத்தின் ஒருங்கிணைப்பு பணிகளை, 'டெடா' எனப்படும் எரிசக்தி மேம்பாட்டு முகமை மேற்கொள்கிறது. ஆந்திர மாநிலத்தில், ரிலையன்ஸ் நிறுவனம், 65,000 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பயோ காஸ் ஆலைகளை அமைக்க, அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த வாரியம் முழுவீச்சில் செயல்படாமல் உள்ளது. எனவே, தமிழகத்திலும் பயோ எரிபொருள் துறையில் முதலீடுகளை ஈர்க்க, அரசு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து, தொழில் துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், 'பயோ எரிபொருள் துறையில் அதிக முதலீடு, திட்டங்களை செயல்படுத்தும் சாதகமான சூழல் தமிழகத்தில் உள்ளது. இதற்காகவே தனி வாரியம் அமைக்கப்பட்டது.அதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. எனவே, முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வாரியம் தனது பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை