உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., பிரச்னை தீர்வுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

ஜி.எஸ்.டி., பிரச்னை தீர்வுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: எதிர்கால மாற்றங்களை கருத்தில் கொண்டு, சீர்திருத்தம், மேம்படுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் துவக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் முடிவுகள் பெரும்பாலும் எளிமையான மொழி நடையில் இருக்க வேண்டும். படிவங்கள் மற்றும் சரிபார்ப்பு பட்டியல்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். டிஜிட்டல் முறையில் ஆவணங்களைத் தாக்கல் செய்தல், மெய்நிகர் விசாரணைகள் நடத்த அனுமதிக்கப்படும். தீர்ப்பாயத்தின் முடிவுகள், சட்டரீதியான சிக்கல்களை குறைப்பதுடன், எளிமையாகவும், தாமதம் இன்றியும் இருக்க வேண்டும். இதனால், சிறு, குறு தொழில்கள், ஏற்றுமதியாளர்களை பணப்புழக்கம் விரைவாக சென்றடையும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை