உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொலைபேசி உரிமம் பெற விண்ணப்பம் நிறுத்திவைப்பு

தொலைபேசி உரிமம் பெற விண்ணப்பம் நிறுத்திவைப்பு

புதுடில்லி: தொலைத்தொடர்பு சேவைக்கான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஏற்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அறிக்கை: தொலைத்தொடர்பு சட்டம் 2023ன் கீழ் உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகளுக்கு அங்கீகாரம் கிடைத்த அறிவிக்கை வெளியாகும் வரை, புதிய விண்ணப்பங்களை ஏற்பதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தொலைத்தொடர்பு சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக, பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்தது. பெறப்பட்ட ஆலோசனைகளை பரிசீலித்து புதிய வரைவு குறித்து முடிவெடுக்கும் வரை, புதிய விண்ணப்பங்களை ஏற்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ