உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பி.எப்.சி., - ஆர்.இ.சி., இணைப்புக்கு ஒப்புதல்

 பி.எப்.சி., - ஆர்.இ.சி., இணைப்புக்கு ஒப்புதல்

புதுடில்லி: பொதுத்துறை நிதி நிறுவனங்களான, பி.எப்.சி., எனப்படும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஆர்.இ.சி., எனப்படும் ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகியவற்றை இணைக்கும் திட்டத்துக்கு இரு நிறுவனங்களின் இயக்குநர் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இணைப்புக்கு பிறகு, புதிய நிறுவனத்தின் மொத்த கடன் புத்தக மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் .என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக நிதியுதவி வழங்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த இணைப்பு மேற்கொள்ளப்படுகிறது. உருவாகும் புதிய நிறுவனம், நம் நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிதியளிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணைப்பு தொடர்பான இறுதி ஒப்புதல்களை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பங்கு ச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு முதலி யவை வழங்க வேண்டி யுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்