உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜெர்மனி அச்சு மை நிறுவனம் முருகப்பா குழுமம் வாங்க ஒப்புதல்

ஜெர்மனி அச்சு மை நிறுவனம் முருகப்பா குழுமம் வாங்க ஒப்புதல்

புதுடில்லி:தமிழகத்தைச் சேர்ந்த முருகப்பா குழும நிறுவனமான மாவ்கோ இன்வெஸ்ட்மென்ட்ஸ், மற்றும் நியூயார்க்கின் அவின்யூ கேப்பிடல் குழும நிறுவனமான அவின்யூ இந்தியா எமர்ஜென்ஸ் நிறுவனம் ஆகியவை, ஜெர்மனியைச் சேர்ந்த எம்.எச்.எம்., ஹோல்டிங் நிறுவனத்தை கையகப்படுத்த, இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.ஜெர்மனியின் ஹியுபர்குரூப் நிறுவனமான எம்.எச்.எம்., ஹோல்டிங், சர்வதேச அளவில் அச்சு மை மற்றும் ரசாயனங்கள் துறையில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா உட்பட ஆசிய சந்தையிலும் இடம்பெற்றுள்ள இந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், மாவ்கோ மற்றும் அவின்யூ நிறுவனங்கள் வாங்க ஹியுபர்குரூப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டன.இந்திய போட்டி ஆணைய ஒப்புதலை அடுத்து, தங்கள் கையகப்படுத்தலை நிறைவு செய்த பின், இந்தியாவில் கூட்டு நிறுவனத்தை துவங்கி, எம்.எச்.எம்., ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகளுக்கு உரிய தொகையை ஹியுபர்குரூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ