உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / காப்பீடு தகவல்களில் கவனம் தேவை

காப்பீடு தகவல்களில் கவனம் தேவை

இந்தியர்களில் பெரும்பாலானோர் தங்கள் காப்பீடு பாலிசிகளின் பலன் குறித்து அதிக தெளிவில்லாமல் இருக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.காப்பீடு தொழில்நுட்ப நிறுவனம் கவர்சுயர் நடத்திய ஆய்வில், இந்தியர்களில் 71 சதவீதம் பேருக்கு மேல், இரண்டு முதல் ஐந்து காப்பீடு பாலிசிகள் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துஉள்ளது. இவற்றில் அதிக அளவில் ஆயுள் காப்பீடு பாலிசியாக அமைந்துள்ளது. மருத்துவ மற்றும் வாகன காப்பீடும் இதில் இடம்பெறுகிறது.எனினும் காப்பீடு அளிக்கும் பலன்கள் அல்லது காப்பீடு நடைமுறை என்று வரும் போது, 65 சதவீதம் பேர் அது தொடர்பான தகவல்களை அறிந்திருக்கவில்லை. பாலிசிதாரர் மட்டும் அல்லாமல் அவர்களை சார்ந்திருப்பவர்களில் 60 சதவீதம் பேர், பாலிசி கீழ் என்ன வருகிறது என்பதை அறியாமலே உள்ளனர்.காப்பீடு தொடர்பான ஆவணங்களை கையாள்வதிலும் பயனாளிகள் மத்தியில் போதாமைகள் உள்ளன. காப்பீடு பலன்களை முழுமையாக பெறுவதில் இவை தடையாக இருக்கும் என கருதப்படுகிறது. காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு மட்டும் போதாது, காப்பீடு செயல்பாடு தொடர்பான புரிதலும் அவசியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ