உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.86 கோடி திரட்டிய பேப்ஹெட்ஸ்

ரூ.86 கோடி திரட்டிய பேப்ஹெட்ஸ்

சென்னை:சென்னையை சேர்ந்த, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனமான பேப்ஹெட்ஸ், 'டீப் டெக்' துறையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம் வான்வழி, மின்சார வாகனம், கப்பல் போன்ற துறைகளுக்கு தேவையான உதிரிபாகங்களை, '3டி பிரின்டிங்' மற்றும், 'ஆட்டோமேட்டட் காம்போசிட்' தொழிநுட்பம் வாயிலாக நுணுக்கமான முறையில் குறைந்த எடையில் மிக வலிமையுடன் தயாரிக்கிறது.இந்நிறுவனம், ஆக்செல் இந்தியா உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 86 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ