உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரூ.871 கோடிக்கு ஆர்டர் பெற்றது பெல்

 ரூ.871 கோடிக்கு ஆர்டர் பெற்றது பெல்

பெங்களூரு : ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான ராணுவ உபகரணங்கள் மற்றும் அமைப்புகளுக்கு, பொதுத்துறை நிறுவனமான 'பெல்' என்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ், 871 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் பெற்றுள்ளது. அதில், நெருப்பு கட்டுப்பாட்டு அமைப்புகள், வெப்ப இமேஜர்கள், மேம்பாடுகள், உதிரிபாகங்கள், இதர சேவைகள் ஆகியவை அடங்கும். இதற்கு முன் கடந்த நவம்பர் 10ல், 792 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்றிருந்த நிலையில், இப்போது கூடுதலாக ஆர்டர் பெற்றிருக்கிறது. இதனால், நேற்று ஒரு நாளில், இந்நிறுவனத்தின் பங்கு விலை 1.24 சதவீதம் அதிகரித்து, 423.70 ரூபாயாக உயர்ந்தது. நடப்பாண்டில் இந்நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 17 சதவீதம் அதிகரித்து, 1,286 கோடி ரூபாயாகவும், வருவாய் 25.75 சதவீதம் அதிகரித்து, 5,764 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆர்டர்களை பொறுத்தவரை, இந்த ஆண்டு, இந்நிறுவனத்திற்கு வலுவான ஆண்டாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி