டில்லியில் பாரத் சர்வதேச அரிசி மாநாடு வரும் 30 , 31 தேதிகளில் நடக்கிறது
புதுடில்லி: உலகளாவிய அரிசி வர்த்தகத்தில், 'பாரத் சர்வதேச அரிசி மாநாடு 2025' இந்தியாவின் மதிப்பை மேலும் வலுப்படுத்தும் என மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.டில்லியில் வரும் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள், பாரத் மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டில், அரிசி வினியோக தொடரில் இடம்பெற்றுள்ள விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகர்கள் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளதாவது: உலக சந்தையில் நம் பங்களிப்பை விரிவுபடுத்தும் அதே வேளையில், பொது வினியோக திட்டத்தின் வாயிலாக அனைத்து மக்களுக்கும் இலவசமான, பாதுகாப்பான உணவு தானியம் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். விவசாயிகள், நுகர்வோரை மையப்படுத்தி, ஏற்றுமதியில் வளர்ச்சி அடையும்போது, உணவு பாதுகாப்புடனும் இணைந்து விவசாயிகளின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.