உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாரத் சேவா கேந்திரா துவக்கம்

பாரத் சேவா கேந்திரா துவக்கம்

புதுடில்லி:அரசின் திட்டங்கள் மற்றும் கிராமப்புற மக்களை இணைக்கும் நோக்கில், பாரத் சேவா கேந்திராவை துவங்கி இருப்பதாக, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பான சி.சி.ஐ., இந்தியா தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை வருமாறு: நிதி உதவி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் அதிகாரமளித்தல், வேலைவாய்ப்பு, வேளாண் தொழில் ஆதரவு ஆகியவற்றில் தேவையான சேவைகளை பாரத் சேவா கேந் திரா உறுதிப்படுத்தும். இந்த அமைப்பு, நாடு முழுதும் 2.50 லட்சத்துக்கு மேற்பட்ட சேவகர்களை கொண்ட துடிப்பான நெட்வொர்க்காக செயல்படும். கடைசி குடிமகன் வரை தொடர்பு ஏற்படுத்தி, அத்தியாவசிய சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்க பாரத் சேவா கேந்திரா பணியாற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை