உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிக்கி புதிய தலைவர் இமாமி அகர்வால்

பிக்கி புதிய தலைவர் இமாமி அகர்வால்

புதுடில்லி:'பிக்கி'யின் புதிய தலைவராக 'இமாமி' நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹர்ஷவர்தன் அகர்வால் பொறுப்பேற்க உள்ளதாக, தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற் கூட்டமைப்பின் 2024 - 25ம் ஆண்டுக்கான தலைவராக, இமாமி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஹர்ஷவர்தன் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ள பிக்கியின் 97வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் தற்போது பிக்கியின் மூத்த துணைத் தலைவராக உள்ள அகர்வால், தலைவராக பொறுப்பேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை