உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜி.எஸ்.டி., 10 சதவிகிதம் குறைப்பு எதிரொலி ஏசி வாங்க முன்பதிவு துவங்கியது

ஜி.எஸ்.டி., 10 சதவிகிதம் குறைப்பு எதிரொலி ஏசி வாங்க முன்பதிவு துவங்கியது

புதுடில்லி:விலை குறைக்கப்பட்ட ஏர்கண்டிஷனை வாங்குவதற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக அறைக்கான ஏசி தயாரிப்பாளர்கள் சங்கமான ஆர்.ஏ.சி., தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், ஏர்கண்டிஷனுக்கு வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, வரும் 22ம் தேதி அமலுக்கு வரவுள்ள நிலையில், 10 சதவீத வரி குறைப்பின் மொத்த பலனையும் நுகர்வோருக்கு வழங்குவதாக ஆர்.ஏ.சி., தெரிவித்துள்ளது. இதன்படி, ஏர்கண்டிஷன் விலையில் கிட்டத்தட்ட 4,000 ரூபாய் குறையும். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏர்கண்டிஷன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், குறைக்கப்பட்ட விலையில், 22ம் தேதிக்கு பிறகு விற்பனை ரசீது வழங்கும் வகையில், தற்போதே சில நிறுவனங்கள் முன்பதிவை துவங்கியுள்ளன. ஹயர், புளூஸ்டார் ஆகிய நிறுவனங்கள் முன்பதிவு செய்து கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. வரும் 21ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என்றும், புதிய ஜி.எஸ்.டி., அமலுக்கு வரவுள்ள 22ம் தேதியிட்ட பில் வழங்கப்பட்டு, ஏசி டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை