வர்த்தக துளிகள்
‘இ- – சாங்கியிகி’ இணையதளத்தில் மாநில வாரியாக தரவு பெறும் வசதி மாநில அளவிலான புள்ளிவிவரங்களை எளிதாக அணுகும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ‘இ- – சாங்கியிகி' இணையதளத்தில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.------------------------------------ ‘உபேர்’ இந்தியா தலைவராக ராகேஷ் ரஞ்சன் நியமனம் ‘உபேர்’ நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய பிரிவு தலைவராக ராகேஷ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உணவு வினியோக நிறுவனமான ‘சொமாட்டோ’ வின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர். ---------------------------ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு ரூ.480 கோடி வழங்க உத்தரவு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 480 கோடி ரூபாய் வழங்க, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தரவு மையங்களை அமைக்கிறது ‘கெயில்’ பொதுத்துறை நிறுவனமான ‘கெயில்’, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 5 மெகாவாட் திறனில் தரவு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், பின்னர் பிற மாநிலங்களுக்கும் விரிவாக்கப்படும்.