உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பயன்படுத்தாத தங்கத்தை பணமாக்கும் திட்டம் சீரமைக்க வணிக அமைப்புகள் வலியுறுத்தல்

பயன்படுத்தாத தங்கத்தை பணமாக்கும் திட்டம் சீரமைக்க வணிக அமைப்புகள் வலியுறுத்தல்

புதுடில்லி:பயன்பாட்டில் இல்லாத, பயன்படுத்தாத தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் மறுசீரமைப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தங்க வணிக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.இந்தியர்கள் தங்கள் வீடுகளில் மொத்தம் 22,000 டன் தங்கம் வைத்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவகாசம்

இது 26 ஆண்டுகளில், நகைகள், கட்டிகள் மற்றும் நாணயங்கள் தயாரிக்க நம் நாடு இறக்குமதி செய்திருக்கும் அளவுக்கு சமமானது. இதில், நேரடி பயன்பாட்டில் இல்லாத, தங்கத்தை வெளிகொணர வும், இறக்குமதியை குறைக்கவும் வரவிருக்கும் பட்ஜெட்டில் ஜி.எம்.எஸ்., எனப்படும் தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தை அறிவித்து, லாபகரமானதாக அதை மாற்ற வேண்டும் என, தங்க வணிக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.தங்க வைப்புத் தொகைக்கு நெகிழ்வான கால அவகாசம், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் திட்டத்தின் கீழ் வங்கிகளில் 500 கிராம் வரையிலான பழைய தங்கம் வைப்புக்கு வருமான வரி விசாரணை தவிர்ப்பு உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளன.

கட்டாயம்

கடந்த 2024ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் நாட்டின் தங்கம் இறக்குமதி சாதனை அளவாக, கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளது. இது 2023ல் செலவிடப்பட்ட 3.60 லட்சம் கோடி ரூபாயை விட அதிகமாகும். ஆகையால், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை மறுசீரமைப்பு செய்வது காலத்தின் கட்டாயம் என்றும் தங்க வணிக அமைப்புகள் கூறியுள்ளன.  தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில், சில்லரை நகைக்கடைகள் பங்கேற்கும் வகையில், திட்டத்தை திருத்த வேண்டும்  லாக்கரில் உள்ள பயன்படுத்தாத தங்கத்தை வெளிக்கொண்டு வரச் செய்ய, வாடிக்கையாளர்களிடம் அங்கீகரிக்கப்பட்ட, நம்பிக்கை பெற்ற சிறு நகைக்கடைகள் உதவலாம் பயன்படுத்தாத தங்கத்தின் பெரும் பகுதி, பணமாக்கும் திட்டத்தில் வெளிவந்தால், நாட்டின் தங்கம் இறக்குமதி குறைய வாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை