நிபுணர் வழிகாட்டல்! உதிரிபாகங்களுக்கு ஒரே நிறுவனத்தை சார்ந்து இருக்கலாமா?
மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள், உதிரிபாகங்களை ஒரே விற்பனையாளரிடம் மட்டும் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சிப் உள்ளிட்ட பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், உற்பத்தி பாதிக்கப்படலாம்.எனவே, மாற்று விற்பனையாளர்களையும் முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருப்பது அவசியம். கவனிக்க வேண்டியவை:
முக்கிய உதிரிபாகங்களுக்கு மாற்று விற்பனையாளர்களை வைத்திருக்க வேண்டும். மாற்று பாகத்தின் தரம், மின் திறன், பொருத்தம் ஆகியவற்றை சோதிக்க வேண்டும். விற்பனையாளரின் நம்பகத்தன்மை, பொருள் கிடைக்கும் காலத்தை அறிய வேண்டும். நிபுணர்: டாக்டர் ரபேல் சால்மி, ஆரோ எலக்ட்ரானிக்ஸ்.