மேலும் செய்திகள்
மின்சார கார் சந்தை 4 சதவீதமாக அதிகரிப்பு
10-Jun-2025
சென்னை: ஜூன் மாத பயணியர் கார் விற்பனை, 5.85 சதவீதம் சரிந்து, பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில், 3.20 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூனில் 3.02 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கும் இந்த நிறுவனம், 18.2 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. மாருதி, ஹூண்டாய், டாடா ஆகிய மூன்று நிறுவனங்களின் விற்பனையும் சராசரியாக 13 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. https://x.com/dinamalarweb/status/1940249553904836681குறிப்பாக, டாடா நிறுவனம், 42 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி கண்டுள்ளது. கியா, டொயோட்டா மற்றும் எம்.ஜி., நிறுவனங்களின் விற்பனை, வளர்ச்சி கண்டுள்ள நிலையில், எம்.ஜி., நிறுவனத்தின் விற்பனை, அதிகபட்சமாக 25.5 சதவீதத்தை எட்டி உள்ளது.
10-Jun-2025