உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வார்ப்பட தொழில் கண்காட்சி ரோபோ இயந்திரங்களுக்கு மவுசு

 வார்ப்பட தொழில் கண்காட்சி ரோபோ இயந்திரங்களுக்கு மவுசு

கோவை: கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடந்த மூன்று நாள் சர்வதேச வார்ப்பட கண்காட்சி நேற்று நிறைவு பெற்றது. ஜெர்மனி, இத்தாலி, சீனா நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், வார்ப்பட இயந்திரங்களை காட்சிப்படுத்தியிருந்தன. 300 அரங்குகள், 1,200 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருந்தன. 10,000 பேர் பார்வையிட்டனர்.கண்காட்சி தலைவர் ஜெயக்குமார் ராம்தாஸ் கூறியதாவது: நவீன ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்கும் இயந்திரங்கள், வெப்பநிலையை துல்லியமாக அளவிடும் கருவிகள், இரும்பை இளக வைக்கும் ரசாயன பொருட்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. 20 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணைகள் இருந்தன. வார்ப்பட தொழில் வளர்ச்சி நன்றாக இருப்பதால், அது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. ரோபோ, வார்ப்பு இயந்திரங்கள், வெளிநாட்டு இயந்திரங்களுக்கு விசாரணைகள் அதிகம் இருந்தன. ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், கனரக இயந்திரங்களின் இன்ஜின், வால்வுகள், குழாய் பதிக்கும் நிறுவனங்கள் அடங்கிய அரங்குகளை அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ