உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழக தொழிற்சாலைகள் கணக்கெடுப்பு; மத்திய புள்ளியியல் துறை துவக்கம்

தமிழக தொழிற்சாலைகள் கணக்கெடுப்பு; மத்திய புள்ளியியல் துறை துவக்கம்

சென்னை: தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விபரங்கள் கணக்கெடுப்பு பணியை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க துறை துவக்கியுள்ளது.நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தொழிற்சாலைகளின் விபரங்கள் அடங்கிய வருடாந்திர கணக்கெடுப்பை, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை நடத்துகிறது. இம்மாதம் முதல், இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. புள்ளியியல் அமைச்சகம் சார்பில், தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளிடம் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடந்தது.இது குறித்து, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை துணை இயக்குநர் ஜெனரல் மனோகர், துணை இயக்குநர் சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில், 43,000 தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகள் சட்டம், நிறுவனங்கள் பதிவு சட்டம் போன்றவற்றில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வருடாந்திர கணக்கெடுப்பின் கீழ் பொருட்கள் கொள்முதல், உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கை, சம்பளம், நிகர மதிப்பு உள்ளிட்ட விபரங்களை, புள்ளியியல் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.நுாறு தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள், இந்த விபரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதற்கு கீழ் பணியாளர்கள் இருந்தாலும், மருந்து உள்ளிட்ட அரிதான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விபரங்களை தெரிவிக்க வேண்டும்.இதுதவிர, கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்ட முதலீடு, அடுத்த இரு ஆண்டுகளில் செய்யப்பட உள்ள முதலீடு பற்றியும் தெரிவிக்க வேண்டும்.உற்பத்தி துறையில், 400 கோடி ரூபாய்க்கும், வணிகத்தில், 300 கோடி ரூபாய்க்கும், மற்ற பிரிவில், 100 கோடி ரூபாய்க்கும் ஆண்டு வர்த்தகத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். இம்மாதம் துவங்கியுள்ள, 2024 - 25 கணக்கெடுப்பு ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.* கொள்முதல், உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கை, சம்பளம், நிகர மதிப்பு உள்ளிட்ட விபரங்களை, புள்ளியியல் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.* தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் தான் புதிய கொள்கைகள், திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ