உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னை ஏ.ஐ., ஸ்டார்ட்அப் ரூ.2,288 கோடி நிதி திரட்டியது

சென்னை ஏ.ஐ., ஸ்டார்ட்அப் ரூ.2,288 கோடி நிதி திரட்டியது

சென்னை:சென்னையைச் சேர்ந்த ஏ.ஐ., 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான, 'யுனிபோர்' பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,288 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. யுனிபோர் நிறுவனம், 2008ல் துவக்கப்பட்டது. உலகளவில் செயல்படும் அந்நிறுவனம், உரையாடல் ஏ.ஐ., வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், மனித தவறுகள் ஏற்படுவதில்லை. வாடிக்கையாளர்ளுக்கு நேரம் மிச்சமாகிறது. இதன் சேவையை வங்கி, விமானம், சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தற்போது யுனிபோர் நிறுவனம், என்.வி.ஐ.டி.ஐ.ஏ., - ஏ.எம்.டி., ஸ்னோபிளேக், டேட்டாபிரிக்ஸ் ஆகிய முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்து, 2,288 கோடி ரூபாய் நிதியாக திரட்டியுள்ளது. இந்த நிதி, ஏ.ஐ., மற்றும் தரவு தளமான, 'பிசினஸ் ஏ.ஐ., கிளவுடில்' புதுமைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின், 'எக்ஸ்' தளத்தில், 'உரையாடல் ஏ.ஐ.,யில் முன்னணியில் உள்ள சென்னையில் துவக்கப்பட்ட யுனிபோர் நிறுவனத்தின் மதிப்பு, 22,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகி உள்ளது. இந்த மைல்கல், சென்னையை உலகளாவிய ஏ.ஐ., வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்துகிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி