உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி

நாங்கள் பணியமாட்டோம் டிரம்புக்கு சீனா பதிலடி

பெய்ஜிங்:அமெரிக்காவின் வரி விதிப்பு அடக்குமுறைக்கு பணிந்து பின்வாங்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கவும், மற்ற நாடுகளின் இறக்குமதி வரியுடன் சமநிலைப்படுத்தவும் பதிலுக்கு பதில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதன்படி, சீனாவுக்கு இரண்டு முறை தலா 10 சதவீதம் வரி விதித்த டிரம்ப், கடந்த 2ம் தேதி அறிவித்த 60 நாடுகளுக்கான வரிவிதிப்பில், சீனாவுக்கு மேலும் 34 சதவீத வரி விதித்தார்.இதை ஏற்காமல், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா 34 சதவீத வரி விதித்தது. இதனால், சீனாவுக்கு டிரம்ப் மேலும், 50 சதவீதம் வரி விதித்ததால், மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது. ஆனால், அவரது எச்சரிக்கையைக் கண்டு கொள்ளாத சீன அரசு, அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு, பதிலடியாக 50 சதவீத வரி விதித்தது. இதனால், ஏற்கனவே இருந்த 34 சதவீத வரியுடன் சேர்த்து, மொத்த வரி விதிப்பு 84 சதவீதமாக உயர்ந்தது.இதோடு, ஐரோப்பிய யூனியனும் அமெரிக்க ஸ்டீல் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்ததால், வேறுவழியின்றி பேச்சு நடத்த ஏதுவாக, 90 நாட்களுக்கு வரிவிதிப்பை நிறுத்தி வைப்பதாக, டிரம்ப் அறிவித்தார்.எனினும், சீனப் பொருட்கள் இறக்குமதி மீது மேலும் 21 சதவீத வரி விதித்து, மொத்த வரி 125 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதற்கு பதில்அளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், நாங்கள் சீனர்கள், அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு பணிந்து பின்வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.இதற்கிடையே, வரி விதிப்பை 90 நாட்கள் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால், இந்திய ஏற்று மதியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, சுமூக தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயலும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ