ரூ.1,000 கோடி முதலீடை ஈர்த்த சிப்காட் உணவு பூங்காக்கள்
சென்னை:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருச்சி மணப்பாறை மற்றும் தேனியில், 'சிப்காட்' நிறுவனம் அமைத்துள்ள மாபெரும் உணவு பூங்காக்களில் இதுவரை, 16 நிறுவனங்கள் வாயிலாக 1,025 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உணவு பொருட்கள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிக்க, மணப்பாறையில் 138 ஏக்கரிலும், திண்டிவனத்தில் 158 ஏக்கரிலும், தேனியில் 124 ஏக்கரிலும், சிப்காட் எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், உணவு பூங்காக்களை உருவாக்கியுள்ளது.