காபி ஏற்றுமதி 40சதவிகிதம் உயர்வு
புதுடில்லி:உலகளவில் காபி விலை உயர்ந்து வரும் நிலையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்., வரையிலான காலத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசில் மற்றும் வியட்நாமில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்கள் காரணமாக, காபி உற்பத்தி குறைந்ததால், உலகம் முழுதும் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காபி விலை உயர்வு கண்டுள்ளது. காபி ஏற்றுமதியில் ஐந்தாவது மிகப்பெரிய நாடாக திகழும் இந்தியா, தன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை ஏற்றுமதி செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி வரையிலான காலத்தில், காபி ஏற்றுமதி, 13,004.75 கோடி ரூபாயாக, 40 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில், 9,070 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.