உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.320 கோடி ஆர்டர் பெற்றது கோவை சி.ஆர்.ஐ., பம்ப்

ரூ.320 கோடி ஆர்டர் பெற்றது கோவை சி.ஆர்.ஐ., பம்ப்

கோவை:மஹாராஷ்டிரா மாநிலத்தில், பி.எம்., குசும் திட்டத்தின் கீழ், 320 கோடி ரூபாய் மதிப்பிலான, சோலார் பம்ப்களுக்கான ஆர்டரை, சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றுள்ளது. வேளாண் துறையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க, 'பி.எம். குசும்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநில மின் வினியோக நிறுவனம், 'மாகேல் தியலா சவுர் கிருஷி பம்ப்' திட்டத்தில், 3, 5, 7.5 ஹெச்.பி., திறன் கொண்ட 10,714 ஆப் கிரிட் சோலார் பம்ப்களுக்கு ஒப்பந்தம் கோரியிருந்தது. இந்த ஆர்டரை, கோவை சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.320 கோடி. சி.ஆர்.ஐ., நிறுவன தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், “இந்திய விவசாயிகளுக்கு துாய்மையான, நம்பகமான, நீடித்த நீர் தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்றார். 120க்கும் மேற்பட்ட நாடுகளில் வர்த்தகம் மேற்கொண்டு வரும் சி.ஆர்.ஐ., நிறுவனம், நாடு முழுதும் 1.81 லட்சம் சோலார் பம்ப் சிஸ்டம்களை நிறுவியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை