உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.5 முதல் 20 வரையிலான பொருட்களின் விலையை மாற்ற போவதில்லை: நுகர்பொருட்கள் தயாரிப்பாளர்கள் திட்டவட்டம்

ரூ.5 முதல் 20 வரையிலான பொருட்களின் விலையை மாற்ற போவதில்லை: நுகர்பொருட்கள் தயாரிப்பாளர்கள் திட்டவட்டம்

புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யை குறைத்தாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 5 முதல் 20 ரூபாய் வரையிலான பிஸ்கட்டுகள், சோப்பு மற்றும் பற்பசை ஆகியவற்றின் விலையை குறைக்க வாய்ப்பில்லை என, மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளிடம், நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளதாவது: இந்தியாவில் மக்கள் ஒரே விலையில் பொருட்களை வாங்கி பழகி உள்ளனர். எனவே, பொருட்களின் விலையை 18 அல்லது 9 ரூபாய் என குறைப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், பரிவர்த்தனையை கடினமாக்கும். இதற்கு பதிலாக, விலையை மாற்றாமல், அதே நேரத்தில் ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன்களை பெறும் வகையில், பொருட்களின் அளவை அதிகரித்து தர இருக்கிறோம். உதாரணமாக, 20 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டால், விலையை குறைக்கா மல், அதே விலைக்கு கூடுதல் பிஸ்கட்டுகள் வழங்க உள்ளோம். விலையை மாற்றாமல், கூடுதல் அளவை வழங்குவதால், ஜி.எஸ்.டி., குறைப்பின் நன்மைகளை நுகர்வோரின் வாங்கும் நடத்தையை மாற்றாமல் கடத்த முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 'விலையை 18 ரூபாய், 9 ரூபாய் என குறைப்பது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், பரிவர்த்தனையை கடினமாக்கும்'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 15, 2025 16:26

விலையை கூட்டாமல் அளவை குறைப்பது வழக்கம். பிஸ்கட், நூடுல்ஸ், தின்பண்டங்கள், சோப்பு போன்ற பொருட்களில் இப்படி அளவை குறைந்து விற்பது சர்வ சாதாரணம். இப்போது உல்டா. விலையை குறைக்காமல் அளவை கூட்டுவது. நல்லதுதான்.


முதல் தமிழன்
செப் 15, 2025 16:17

இவர்கள் முன்பு 5₹ விற்றபோது இருந்த அளவு தற்போது அதே 5₹ அளவு குறைவு. பிறகு இவர்கள் ஏமாற்றுவார்கள். தயவு செய்து மஃரிப் விலையை குறைக்கவும். 26 கிலோ இட்லி அரிசி சிப்பம் MRP 1800 ரூபாய் என்று அச்சிடப்பட்டு 980 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் இப்படி. உச்ச பச்ச சில்லறை விலை அரசு கட்டுப்படுத்தினால் போதும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 15, 2025 16:52

₹980 லேயே அவர்களுக்கு குறைந்தது 30% லாபம் கிடைக்கும். EM


M Ramachandran
செப் 15, 2025 12:10

வரி ஏற்றும்போது இப்படி பேசுவார்களா? பெரும்பாலும் வணிகர் சங்கங்கள் சந்தர்ப்பவாதிகள்.


M Ramachandran
செப் 15, 2025 12:08

அடுத்த பகல் கொள்ளையர்கள்


vbs manian
செப் 15, 2025 09:05

அரசு தடுக்கில் புகுந்தல் இவர்கள் கோலத்தில் புகுந்து விடுகின்றனர்.


முக்கிய வீடியோ