உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அங்கீகரிக்கப்பட்ட கார் கடனை ரத்து செய்ய கோரும் வாடிக்கையாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட கார் கடனை ரத்து செய்ய கோரும் வாடிக்கையாளர்கள்

புதுடில்லி:இம்மாதம் 22ம் தேதி முதல், குறிப்பிட்ட வகை கார்களுக்கான ஜி.எஸ்.டி., குறைய இருக்கும் சூழலில், ஏற்கனவே கார் கடனுக்காக விண்ணப்பித்து, வங்கியின் அங்கீகாரம் பெற்றவர்கள், இப்போது விண்ணப்பத்தை திரும்ப பெற வங்கிகளை முற்றுகையிட துவங்கியுள்ளனர். இந்த மாதம் நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 1,200 சிசி வரையிலான கார்களுக்கான வரி விகிதம், தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக கணிசமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 22-க்கு முன்னதாக, கார் கடன்கள் அனுமதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள், வரி குறைப்பு அமலுக்கு வந்த பின், வாகனங்களை வாங்க விரும்புவ தால், தொடர்புடைய வங்கிக் கிளைகளைத் தொடர்பு கொண்டு, கடனை ரத்து செய்யக் கோருகின்றனர் என்று பொதுத்துறை வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரத்து செய்யும் கட்டணங் கள், செப்டம்பர் 22-க்கு பின் கிடைக்கும் பயன் களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாக இருப்பதால், கடனை ரத்து செய்வதில் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கார் வினியோகஸ்தர் வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியல் வழங்கியிருந்தால், பழைய ஜி.எஸ்.டி., விகிதம் பொருந்தும் என்றும்; விலைப்பட்டியல் வழங்கவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் புதிய ஜி.எஸ்.டி., விகிதத்தைப் பயன்படுத்திக் கொள்ள லாம் என்றும் தெரிவித் தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !