உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பிரத்யேக 5ஜி நெட்வொர்க் என்.டி.டி., டேட்டா - எரிக்சன் கூட்டு

 பிரத்யேக 5ஜி நெட்வொர்க் என்.டி.டி., டேட்டா - எரிக்சன் கூட்டு

புதுடில்லி: நிறுவனங்களுக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க் வழங்கவும், ரோபோ, தானியங்கி வாகனங்கள் போன்ற இயந்திர ஏ.ஐ., தொழிநுட்பங்களை அளிக்கவும் சர்வதேச ஏ.ஐ., நிறுவனமான என்.டி.டி., டேட்டா, தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான 'எரிக்சன்' ஆகியவை கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுஉள்ளன. இது குறித்து இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: நிறுவனங்களை பிரத்யேக 5ஜி நெட்வொர்குக்கு மாற்றுவதன் வாயிலாக, மேம்பட்ட எட்ஜ் ஏ.ஐ., இயந்திர ஏ.ஐ., பயன்பாடுகளுக்கு அவற்றை முன்னேற்றுவதற்காக என்.டி.டி., டேட்டா - எரிக்சன் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டாண்மை, ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும், எதிர்கால பலனை நோக்கமாக கொண்ட மாற்றங்களை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி தரும். எரிக்சனின் பிரத்யேக 5ஜி தொழில்நுட்பம், எட்ஜ் தளங்களுடன் என்.டி.டி., டேட்டாவின் நிறுவன நெட்வொர்க் சேவைகள், வயர்லெஸ் நெட்வொர்க் நிபுணத்துவம், ஐ.டி., பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றை இணைப்பதன் வாயிலாக, நிறுவனங்கள் பிரத்யேக 5ஜி நெட்வொர்க்குக்கு மாறவும், அதை கொண்டு தொழிலில் முன்னேற்றம் காணவும் உதவுவதே இந்த கூட்டணியின் நோக்கம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை