துளிகள்
அறிமுகம்ஜோஹோ நிறுவனம், அதன் தயாரிப்புகளை பயன்படுத்தும் நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எல்.எல்.எம்., எனும் லார்ஜ் லேங்குவேஜ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.இது, பேச்சை உரையாக மாற்றக் கூடிய திறன் பெற்றது என ஜோஹோ தெரிவித்துள்ளது. மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசினால், உரையாக மாற்றக்கூடிய தானியங்கி பேச்சு அங்கீகார மாதிரிகளையும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.விரைவில் இன்னும் சில இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.