உள்ளூர் செய்திகள்

துளிகள்

சுசூகி கார் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்

சுசூகி நிறுவனத்தின் கார் ஏற்றுமதியில், உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சுசூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் டோஷிஹிரோ சுசூகி கூறியுள்ளார். ஜப்பானில் நடந்து வரும் வாகன கண்காட்சியில் அவர் கூறுகையில், “இந்தியா, எங்களின் மிக முக்கிய மற்றும் உலகின் பெரிய கார் சந்தை; இந்தியாவுக்காக பல திட்டங்களை வைத்துள்ளோம். உலக அளவில், உற்பத்தி செய்யப்படும் சுசூகி கார்களில், இந்தியாவின் பங்கு 61 சதவீதம். சுசூகி கார் விற்பனையில், இந்தியா 57 சதவீத பங்கை வைத்துள்ளது. இந்தியாவில், 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம்'' என்றார்.

தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் ஏற்றுமதியாளர்கள் கவலை

ம த்திய அரசின் தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் பிரதிநிதிகளுடன் விவாதிப்பதற்காக, டில்லியில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சரிடம் தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் இறுதி பொருளின் மீது விதிக்கப்பட வேண்டும் என்றும், உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உள்ளீட்டு பொருட்களின் மீது விதிக்கப்படக்கூடாது என்றும் ஏற்றுமதியாளர்களின் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருமான வரி ஆய்வு: எக்ஸைட் தகவல்

புதுடில்லி: பே ட்டரி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் தயாரிப்பு ஆலைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குசந் தை தாக்கல் செய்த அ றி க் கை யில், ஆய் வு இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதற்காக நேற்று நடைபெற இருந்த இயக்குனர் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி