உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.115 கோடி முதலீடு திரட்டியது ஏர் டாக்சி தயாரிக்கும் இ-பிளேன்

ரூ.115 கோடி முதலீடு திரட்டியது ஏர் டாக்சி தயாரிக்கும் இ-பிளேன்

சென்னை:மின்சார கார் போல மின்சாரத்தில் இயங்கும் சிறிய விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, சென்னையைச் சேர்ந்த 'இ-பிளேன்' நிறுவனம், 115 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது.மின்சார விமான தயாரிப்புக்கான புத்தாக்க நிறுவனமான இ-பிளேன், நகரங்களுக்கு இடையே, விரைவான போக்குவரத்துக்கு உதவும் வகையில், 'ஏர் டாக்சி' எனப்படும் மின்சார விமான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.அதில் செங்குத்தாக மேலெழுந்து, தரையிறங்கும் தொழில்நுட்ப வடிவமைப்புக்கு, பிரத்யேகமாக இரண்டு நிறுவனங்களிடம் இருந்து 115 கோடி ரூபாய் முதலீட்டை இந்நிறுவனம் பெற்றுள்ளது.மேலும், சர்வதேச அளவிலான கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்களை பெறவும்; தன் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்கவும், இந்த தொகையை இ-பிளேன் நிறுவனம் பயன்படுத்த உள்ளது.சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப பரிசோதனை வசதிகளை பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் சத்யா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் இருந்து, விமான வடிவத்திற்கான ஒப்புதல் பெற்றுள்ளதாகவும்; விமானத்திற்கான சான்றிதழ் பெறும் நடைமுறை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.,யின் உதவியால் உருவான 'ஏர் டாக்சி' புத்தாக்க முயற்சி, 2025 மார்ச்சில் முழுமை பெறும் மின்சார விமானங்கள், மக்கள் நெரிசல்மிக்க நகரப் பகுதிகளில் எளிதாக பயணிக்க உதவும் பறக்கும் டாக்சிகளான இவற்றை ஒரு விமானி இயக்குவதுடன் நான்கு பேர் வரை பயணிக்கலாம் ஒரு முறை சார்ஜ் செய்தால், 200 கி.மீ., வரை இந்த ஏர் டாக்சி பயணிக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை