‘இ – வே’ பில் பயன்பாடு அக்டோபரில் 23% உயர்வு
புதுடில்லி: பண்டிகை கால தேவை மற்றும் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பால், கடந்த அக்டோபரில் ‘இ – வே’ பில் பயன்பாடு, வரலாறு காணாத வகையில் 15.62 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபரை விட 23 சதவீதமும், முந்தைய செப்டம்பர் மாதத்தை விட 10 சதவீதமும் அதிகமாகும். ஜி.எஸ்.டி., விதிகளின்படி 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல °இ – வே’ பில் அவசியம். வரி விகித சீரமைப்பால் அமைப்புசாரா வணிகர்களும் முறையான வரி வரம்பிற்குள் வந்திருப்பதும், பண்டிகை கால விற்பனையும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது, வரவிருக்கும் மாதங்களில் ஜி.எஸ்.டி., வரி வசூல் அதிகரிக்கும் என்பதை உணர்த்துவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இ–வே பில் நிலவரம்
மாதம் | எண்ணிக்கை (கோடியில்)2026ஏப்ரல் | 13.33மே 13.61ஜூன் | 13.68ஜூலை | 13.98ஆக., | 13.91செப்., | 14.15அக்., | 15.62