உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

60 தொழிற்பேட்டையில் 1,520 மனைகள் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சேலம் வெள்ளி கொலுசு தொழிலுக்கான அடுக்குமாடி தொழிற்கூடத்தை உள்ளடக்கிய, மொத்தம் 60 தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு ஒதுக்கும் பணியில், 'சிட்கோ' ஈடுபட்டுள்ளது.சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, 102 தொழில் அலகுகளுடன் கூடிய அடுக்குமாடி தொழிற்கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும், காஞ்சிபுரம் வையாவூர், திருவள்ளூர் காவேரிராஜபுரம், துாத்துக்குடி லிங்கம்பட்டி, திருவாரூர் வண்டாம்பாளையில் புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ அமைத்து உள்ளது.இந்த புதிய தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகள் மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டைகளில் இருக்கும் காலி மனைகள் என, மொத்தம், 60 தொழிற்பேட்டைகளில் உள்ள, 1,520 மனைகளை தற்போது தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யும் பணியில், சிட்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனையைப் பெற விண்ணப்பிக்கும் விபரங்களை, சிட்கோவின், 'www.tansidco.tn.gov.in' இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பம் செய்பவரிடம் நேர்காணல் நடத்தி, மனைகள் ஒதுக்கப்படும். https://x.com/dinamalarweb/status/1938485366530736470ஒரே மனைக்கு அதிகம் போட்டி இருந்தால், விண்ணப்பதாரர் முன்னிலையில் குலுக்கல் நடத்தி ஒதுக்கப்படும். அடுத்த மாதம் 22ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை