உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஈரோடு விற்பனை கூடத்தில் ரூ.1,517 கோடிக்கு வர்த்தகம்

ஈரோடு விற்பனை கூடத்தில் ரூ.1,517 கோடிக்கு வர்த்தகம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட விற்பனைக் கூடம் வாயிலாக, 2024-25ம் நிதியாண்டில், 2.04 லட்சம் டன் வேளாண் விளைபொருட்கள், 1,517 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.இதுபற்றி, ஈரோடு மாவட்ட விற்பனைக் குழு செயலர் மற்றும் வேளாண் துணை இயக்குநர் சாவித்ரி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு விற்பனைக் குழு வாயிலாக, வேளாண் விளைபொருட்கள் வியாபாரிகளுக்கு நேரடியாக, ஏல முறையில் விற்பனை வாய்ப்பு வழங்கப்படுகிறது. 18 ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், இரு துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக இதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.பெருந்துறை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கும் மஞ்சள் ஏலம், தேசிய அளவில் பிரபலமானது. இங்கு மஞ்சள், பருத்தி, எள், நிலக்கடலை, கொப்பரை தேங்காய், தேங்காய், கரும்பு சர்க்கரை உட்பட பல விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.கடந்த, 2024-25ம் ஆண்டில், இரண்டு லட்சத்து, 4,571 டன் வேளாண் விளைபொருட்கள், 1,517 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையாகின. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு, 18.93 கோடி ரூபாய் விற்பனை வருவாய் கிடைத்துள்ளது.இதன் வாயிலாக, 1.09 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் (இ-நாம்) 18 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இணைக்கப்பட்டு, 121 கோடி ரூபாய் மதிப்பில், 16,881 டன் விளைபொருட்கள் விற்பனையாகி உள்ளன. இதன் வாயிலாக, 55,055 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை