கண்காட்சி கார்னர் ‘பேக் விஷன் எக்ஸ்போ – 2026’
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் 15 முதல் 17ம் தேதி வரை, ‘பேக்விஷன் எக்ஸ்போ – 2026’ பேக்கேஜிங் தொழில் கண்காட்சி நடைபெற உள்ளது. பேக்கேஜிங் இயந்திரங்கள் முதல் லேபிள் அச்சிடுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் பொருட்கள் வரை பல்வேறு தொழில்நுட்பங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. என்ன பார்க்கலாம்?
- பேக்கேஜிங் இயந்திரங்கள் - அட்டைப்பெட்டி தயாரிப்பு இயந்திரங்கள் - லேபிள் அச்சிடும் தொழில்நுட்பங்கள் யாருக்கு பயன்படும்?
- உணவு மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் - மருந்து மற்றும் அழகுசாதன பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் - பேக்கேஜிங், அச்சிடுதல் மற்றும் லேபிள் நிறுவனங்கள் நிறுவனங்களுக்கு என்ன பயன்?
- புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நேரில் அறியலாம் - உற்பத்திக்கு ஏற்ற பேக்கேஜிங் முறைகளை ஒப்பிடலாம் - இயந்திர தயாரிப்பாளர்கள், சப்ளையர்களை நேரடியாக சந்திக்கலாம் கண்காட்சி விபரம்
நாட்கள்: அக். 15–17, 2026
இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்
நேரம்: காலை 10:00 – மாலை 6:00 மணி
கடைசி நாள்: மாலை 5:00 மணி வரை
அனுமதி: இலவசம்; இணையதள முன்பதிவு அவசியம்
இணையதளம்: www.packvisionexpo.com/chennai