உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.8,300 கோடியில் பாக்ஸ்கான் விரிவாக்கம்?

ரூ.8,300 கோடியில் பாக்ஸ்கான் விரிவாக்கம்?

சென்னை:இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் கிட்டத்தட்ட 8,300 கோடி ரூபாய் முதலீட்டில், ஐபோன்களுக்கான 'டிஸ்பிளே மாட்யூல்கள் 'தயாரிப்பதற்கான ஆலையை அமைக்க, 'பாக்ஸ்கான்' நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தைவானை சேர்ந்த பாக்ஸ்கான், ஒப்பந்த அடிப்படையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐபோன், ஐபேடு' தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக டிஸ்பிளே மாட்யூல்கள் தயாரிப்பு ஆலை அமைக்க, தற்போது முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, பாக்ஸ்கான் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:பாக்ஸ்கான் நிறுவனம், சென்னை ஒரகடத்தில் உள்ள ஸ்மார்ட்போன் ஆலை அருகே 5 லட்சம் சதுர அடி இடத்தை கையகப்படுத்தி உள்ளது. இந்த ஆலை அமைந்ததும், உள்நாட்டிலேயே டிஸ்பிளே மாட்யூல்களை இந்திய நிறுவனங்கள் வாங்க வழியேற்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை