உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நுகர்வோருக்கு நேரடியாக அரிசி விற்பனை செய்ய எப்.சி.ஐ., திட்டம்

நுகர்வோருக்கு நேரடியாக அரிசி விற்பனை செய்ய எப்.சி.ஐ., திட்டம்

புதுடில்லி டில்லியில் நவ., 14ல் நடக்கவுள்ள வருடாந்திர வர்த்தக கண்காட்சியில், அரிசியை நேரடியாக நுகர்வோருக்கு சில்லரை விற்பனை செய்ய இந்திய உணவு கழகமான எப்.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. இந்திய உணவு கழக கிடங்குகளில் இருந்து வரும்காலங்களில், அரிசியை நேரடியாக நுகர்வோருக்கு சில்லரை விற்பனை செய்வதன் சோதனை முயற்சியாக இந்த விற்பனை நடைபெறவுள்ளது. நுகர்வோரிடம் இருந்து இதுகுறித்த ஆலோசனைகளை கேட்கவும் எப்.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. மேலும், குறைந்தது 10,000 டன் அரிசியை வாங்கி இருப்பு வைக்க விரும்பும் மொத்த வணிகர்கள், அருகாமையில் உள்ள எப்.சி.ஐ.,யிடம் டெண்டரில் பங்கேற்று வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து செலவை எப்.சி.ஐ., ஏற்க முன்வந்துள்ளது. கிடங்கில் இருந்து 4.60 லட்சம் டன் அரிசியை விற்பதற்கான முதலாவது டெண்டரை எப்.சி.ஐ., கடந்த 17 ம் தேதி வெளியிட்டது. ஒரு குவின்டால் அரிசியின் விலை 2,800 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதைய டெண்டரில், 10,000 டன் முதல் அதிகபட்சமாக 50,000 டன் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கிடங்குகளில் இருந்து மின்னணு ஏலத்தில் அரிசி வாங்கியவர்கள் சொந்த பயனுக்கு பயன்படுத்தாமல், மறுவிற்பனை செய்யக்கூடாது; ஏற்றுமதி செய்யக்கூடாது என்ற நிபந்தைகளை நினைவூட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை