தமிழகத்தில் முதல் முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு
சென்னை: தமிழகத்தின் முதல் அறிவுசார் சொத்துரிமை மாநாடு, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் இன்று நடக்கிறது. தமிழகத்தை அறிவுசார் சொத்துரிமை தலைநகராக மாற்றும் வகையில், வணிகமயமாக்கலை ஊக்குவிக்கும் விதத்தில், அறிவுசார் 'ஐ என் டூ டி.என்' என்ற பெயரில், அறிவுசார் சொத்துரிமை மாநாடு ஆண்டு தோறும் நடக்கும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது. இதன் அடிப்படையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தமிழகத்தின் முதல் அறிவு சார் சொத்துரிமை மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், தொழில்துறை முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் காப்புரிமை குறித்த இலவச பயிற்சிகள், ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.