உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உணவு பாதுகாப்பு சோதனை

உணவு பாதுகாப்பு சோதனை

உணவு பாதுகாப்பு சோதனை 3,280 டன் பொருட்கள் சிக்கின புதுடில்லி: நாடு முழுதும் நடத்தப்பட்ட உணவு பாதுகாப்பு சோதனையில், 82 கோடி ரூபாய் மதிப்பிலான 3,280 டன் உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தெரிவித்துள்ளதாவது: பண்டிகை காலத்தில் உணவு பொருட்களில் கலப்படத்தை தடுக்க, செப்.,1 முதல் நவ.,5 வரை நாடு முழுதும் 56,431 உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட மற்றும் உணவு பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத பனீர், நெய், பால், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறல்கள் காரணமாக 52 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 1,133 உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, 314 நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. குறைபாடுகளை சரிசெய்யுமாறு உணவு தொழில் நடத்துவோருக்கு 10,047 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. உணவு தயாரிப்பு, விற்பனை நிறுவனங்கள் மட்டுமின்றி, இணையவழி உணவு விற்பனை நிறுவனங்கள் மீதான கண்காணிப்பும் இந்த ஆண்டில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !