உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.58,711 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.58,711 கோடிக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி:கடந்த செப்டம்பரில், இந்திய பங்குகளின் மீதான அன்னிய முதலீடு அதிகபட்சமாக 57,724 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், இம்மாதம் ஒன்று முதல் 11ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 58,711 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அதிகபட்ச விற்பனை இதுவாகும்.இஸ்ரேல் - ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சீன சந்தையின் வலுவான செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள சந்தை நிச்சயமற்ற தன்மையால், அன்னிய முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் சந்தைகளில் செய்துள்ள தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்று வருகின்றனர்.நடப்பாண்டில் இதுவரை, பங்குகளில் 41,899 கோடி ரூபாயும், கடன் சந்தையில் 1.09 லட்சம் கோடி ரூபாயும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை