உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ரூ.8,749 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.8,749 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

புதுடில்லி:இம்மாதத்தின் முதல் வாரத்தில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகளில் தாங்கள் செய்திருந்த முதலீடுகளில் இருந்து 8,749 கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர்.இந்திய பங்கு சந்தைகளில் இருந்து இம்மாதத்தின் முதல் வாரம் 2 முதல் 6 தேதி வரையிலான காலகட்டத்தில், 8,749 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர். இதற்கு அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக பதற்றங்கள் மற்றும் அமெரிக்க பத்திர வருவாய் அதிகரிப்பு உள்ளிட்ட உலகளாவிய வர்த்தக சூழலே காரணம் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, நடப்பாண்டில் அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற தொகை 1.01 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. கடந்த மே மாதத்தில் 19,860 கோடி ரூபாயும், ஏப்ரலில் 4,223 கோடி ரூபாயும் நிகர முதலீடாக அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ