உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எரிபொருள் கட்டுப்பாடு திறன் விதிகள் சிறிய கார்களுக்கு தளர்த்த ஆலோசனை

எரிபொருள் கட்டுப்பாடு திறன் விதிகள் சிறிய கார்களுக்கு தளர்த்த ஆலோசனை

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, சிறிய வகை கார்களுக்கான எரிபொருள் திறன் கட்டுப்பாடுகளை தளர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவின் கார்ப்பரேட் சராசரி எரிபொருள் விதிமுறைகளின்படி, 3,500 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட கார்களின் கார்பன் உமிழ்வு அளவு, அவற்றின் எடையோடு இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் கார்பன் வெளியேற்றம் இருக்க வேண்டும். கார்பன் உமிழ்வை குறைக்க ஹைபிரிட் அல்லது மின்சார கார்களை தயாரிக்க வேண்டும்.இந்த விதிமுறைகள் ஒருபுறமிருக்க, எஸ்.யு.வி., கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், சிறிய கார்களின் விற்பனை குறைந்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகியின் விற்பனையில், சிறிய கார்கள் முக்கிய பங்காற்றின. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையில் ஆல்டோ, வாகன் -ஆர் உள்ளிட்ட சிறிய வகை கார்களின் பங்கு 66 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில், 50 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது. இதையடுத்து, இந்த ரக கார்களுக்கான எரிபொருள் திறன் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தளர்த்துமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மலிவு விலை கார்களின் விற்பனை சரிந்தால், நாட்டின் பயணியர் கார் சந்தை பாதிக்கப்படும் என்பதால், வரும் 2027 ஏப்ரல் முதல் 1,000 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட கார்களுக்கு விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்படும் என கூறப்படுகிறது. மாருதி சுசூகியின் 17 மாடல்களில் 10 மாடல்கள், 1,000 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajan A
ஜூன் 29, 2025 05:30

தகர டப்பாக்களை இன்னும் எவ்வளவு நாள் விற்க முடியும்? இந்த வாகனங்களின் சேஃப்டி ஸ்டாண்டர்ட் எல்லாருக்கும் புரிந்து விட்டது. அது என்ன மாருதி? சுசூகியாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது