உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில்நுட்பங்களை வாங்க ‘ஸ்டார்ட் அப்’களுக்கு நிதி

தொழில்நுட்பங்களை வாங்க ‘ஸ்டார்ட் அப்’களுக்கு நிதி

சென்னை: தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, புதிய தொழில்நுட்பங்களை வாங்க தலா, 5 லட்சம் ரூபாய் வரை அரசு நிதியுதவி வழங்க உள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லுாரியை உள்ளடக்கிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு துறைகளுக்கு பயன்படக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். அவை பெரும்பாலும், தயாரிப்புகளாக மாற்றப்படுவதில்லை. அந்த தொழில் நுட்பங்களை தயாரிப்புகளாக மாற்றுவது ஊக்குவிக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் தொழில்நுட்ப தீர்வுகளை தங்கள் தொழிலுக்கு வாங்கும், ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா, 5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது. இத்தி ட்டத்திற்காக தற்போது, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவ., 15ம் தேதி கடைசி நாள். ஸ்டார்ட் அப் டி.என்., இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை