ஜூலையில் ஆடை ஏற்றுமதி 10.72 சதவீதம் அதிகரிப்பு
திருப்பூர்:கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், நம் நாட்டில் இருந்து, 11,527 கோடி ரூபாய்க்கு, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'ஜூலை மாதத்தில் ஏற்றுமதி அதிகரித்துஉள்ளது. அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, செப்., மாத ஏற்றுமதியில் இருந்து தான் வர்த்தக பாதிப்பு விபரம் தெரியவரும். அமெரிக்கா விதித்துள்ள, இரண்டாம்நிலை 25 சதவீத வரி ரத்தானால்,மத்திய அரசு உதவியுடன், வழக்கம் போல்ஏற்றுமதி வர்த்தகத்தை தொடர முடியும்' என்றனர்.