மேலும் செய்திகள்
ஜெம் போர்ட்டலை கண்காணிக்க வலியு।றுத்தல்
05-Apr-2025
சென்னை:தமிழக அரசு, உலக 'ஸ்டார்ட் அப்' மாநாட்டை நடத்தாமல் தாமதம் செய்து வருவது, புத்தொழில் நிறுவனங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பு கிடைக்கவும், புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவும், சென்னையில் பிப்., 21, 22ல் உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை நடத்த, அரசு முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. திடீரென அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டு, சென்னைக்கு பதில் கோவையில், வரும் மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கோவையில் நடத்துவதாக இருந்த மாநாட்டையும் ஸ்டார்ட் அப் டி.என்., ஒத்திவைத்துள்ளது. மாநாடு தாமதமாகி வருவது, புத்தொழில் நிறுவனங்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:எங்களின் தயாரிப்புகள், சேவைகளுக்கு பல நாடுகளில் தேவை இருந்தாலும், அதை கண்டறிய அதிக செலவாகிறது. எங்கள் நிறுவனங்கள் புதிதாக துவக்கப்பட்டவை என்பதால், இந்த செலவை சமாளிக்க முடியாமல், நெருக்கடிக்கு ஆளாகின்றன. ஸ்டார்ட் அப் மாநாடு நடைபெற்றால் எங்களின் இத்தகைய பிரச்னைகள் தீரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், அறிவித்து ஓராண்டாகியும், மாநாட்டை நடத்தாமல் தாமதம் செய்வது ஏமாற்றத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சட்டசபை தொடர் உள்ளிட்ட நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது' என்றார்.
05-Apr-2025