உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கிரீவ்ஸ் எலக்ட்ரிக் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி

கிரீவ்ஸ் எலக்ட்ரிக் ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி

மும்பை:மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் 'கிரீவ்ஸ் எலக்ட்ரிக்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர 'செபி' ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்நிறுவனம், மொத்தம் 18.90 கோடி பங்குகளை, பங்குச் சந்தையில் பட்டியலிட உள்ளது. இதில், அப்துல் லத்தீப் ஜமீல் கிரீன் மொபிலிட்டி நிறுவனம், 13.80 கோடி பங்குகளையும், கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம், 5.10 கோடி பங்குகளையும் வைத்துள்ளன. 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கூடுதல் பங்குகளையும் வெளியிட உள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்து உள்ளது.இதில் ஈட்டப்படும் முதலீடுகள், புதிய அறிமுகங்கள், தொழில்நுட்ப மையம், பேட்டரி அசெம்பிளி திறன் அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆம்பியர்' பிராண்டின் கீழ், இருசக்கர மின் வாகனங்களையும், 'அய்லி' பிராண்டின் கீழ் மூன்று சக்கர மின் வாகனங்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் ராணிப்பேட்டை, உத்தர பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டா மற்றும் தெலுங்கானாவில் துப்ரான் ஆகிய பகுதிகளில் இந்நிறுவனத்தின் ஆலைகள் அமைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி