உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.70 லட்சம் கோடி

 நவம்பரில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.70 லட்சம் கோடி

புதுடில்லி: கடந்த நவம்பர் மாதத்துக்கான மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 0.70 சதவீதம் உயர்ந்து 1.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி., குறைப்பால் உள்நாட்டு வரி வருவாய் குறைந்ததே வளர்ச்சியின் வேகம் குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் இருந்த வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., 10.20 சதவீதம் அதிகரித்து 45,976 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு நவம்பரில், ஜி.எஸ்.டி., வசூல் 1.69 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த மாதம் 18,196 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. இதை கழித்து பார்த்தால், நிகர ஜி.எஸ்.டி., வருவாய் 1.52 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த மாதம் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூல் நான்கு சதவீதம் குறைந்து 3,764 கோடி ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ