உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உச்சத்தில் ஹூண்டாய்

உச்சத்தில் ஹூண்டாய்

வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் போது 2.4 சதவீதம் அதிகரித்து, புதிய உச்சமாக பங்கு ஒன்று 2,049 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. கடந்தாண்டு அக்., 22ல் பங்குச்சந்தையில் ஹூண்டாய் மோட்டார் பங்கு ஒன்று 1,960 ரூபாய்க்கு பட்டியலானது.நடப்பு மாதத்தில் மட்டும் 11 சதவீதம் இந்நிறுவன பங்கு விலை உயர்ந்துள்ளது. சந்தையில் திடீரென பங்குகள் உயர்வுக்கான காரணம் தெரியவில்லை. எனினும், நடப்பு நிதியாண்டில், உள்நாட்டில் கார்கள் விற்பனை சவாலை எதிர்கொண்டு வருகின்ற போதிலும், ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை