| ADDED : டிச 05, 2025 02:10 AM
புதுடில்லி: டில்லியில் காற்று மாசு பிரச்னைக்கு மத்தியில், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் 'டொயோட்டா மிராய்' காரை பயன்படுத்துவதாக, லோக்சபாவில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: எதிர்கால எரிபொருள், ஹைட்ரஜனாகத் தான் இருக்கும். என்னிடம் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் டொ யோட்டாவின் கார் உள்ளது. இது மெர்சிடிஸ் காரில் பயணிப்பது போன்று சவுகரியமாக உள்ளது. அந்த காரின் பெயர் மிராய். அதன் ஜப்பானிய அர்த்தம் எதிர்காலம் என்பதாகும். மின்சார வாகனங்கள் பயன்பாடு காரணமாக சில ஆண்டுகளில் உலகளவில் வாகன உற்பத்தியில், நாம் முதலிடத்தில் இருப்போம் என நம்பிக்கை உள்ளது. மத்திய அரசு காற்று மாசை தடுப்பதற்காக, பயோ எரிபொருளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.