உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மினிமம் பேலன்ஸ் பின்வாங்கியது ஐ.சி.ஐ.சி.ஐ.,

மினிமம் பேலன்ஸ் பின்வாங்கியது ஐ.சி.ஐ.சி.ஐ.,

மும்பை:மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகையை 50,000 ரூபாயில் இருந்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி 15,000 ரூபாயாக குறைத்துள்ளது. அண்மையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கடந்த 1ம் தேதி முதல், துவங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கான மாதாந்திர சராசரி குறைந்தபட்ச இருப்பு தொகையை அதிரடியாக ஐந்து மடங்கு அதிகரித்தது. மெட்ரோ நகரங்களில், இது 10,000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக அறிவிக்கப்பட்டது. இது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய நிதி அமைச்சகம் தலையிடுமாறு சமூக அமைப்பு ஒன்று வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், அதிரடியாக இருப்புத் தொகையை குறைத்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, மெட்ரோ, நகரங்களில் 15,000 ரூபாயாகவும் சிறுநகரங்களில் 7,500 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 2,500 ரூபாயாகவும் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ