ரஷ்ய கச்சா எண்ணெயை தடுத்தால்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எண்ணெய் வினியோகம் மற்றும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினால், உலக கடுமையான விளைவுகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். ஜப்பான், துருக்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கின்றன. உலக அளவில், கச்சா எண்ணெய் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் ரஷ்யா, தினசரி ஒரு கோடி பேரல்களை வெளிநாடுகளுக்கு சப்ளை செய்கிறது. அதன் விற்பனைக்கு தடை ஏற்படுத்தினால், மற்ற நாடுகள் எரிபொருள் பயன்பாட்டை குறைத்து கொள்வதுதான் வழி. ஆனால், அது இயலாத காரியம் என்பதால், மோசமான விளைவுகள்தான் ஏற்படும். - ஹர்தீப் சிங் புரி,பெட்ரோலியத் துறை அமைச்சர்